பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்… பரபரப்பு தகவல் வெளியிட்ட பிரபல நடிகர் அமீர்கானின் மகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகள் ஐரா கான் தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதற வைக்கும் தகவலை வெளியிட்டு உள்ளார். அதில் 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனக் கூறியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அமீர்கானின் முதல் மனைவி ரீனாவுக்கு பிறந்தவர் ஐரா கான். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் அதில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
“என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்க்குள்ளாகவில்லை. ஏனென்றால் இணக்கமான முறையில் விவாகரத்து நடந்தது. அவர்கள் இன்னும் நண்பர்களாகவே இருக்கின்றனர். ஒட்டுமொத்த குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்து விடவில்லை.
எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார் அதை தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது.
எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலில் இருந்து மீட்டனர். அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை. முடிந்து விட்டது என்று நான் கடந்து வந்து விட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை.
ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும் எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்தேன். எந்தப் பிரச்சனையுமே நீண்ட நாட்கள் நாம் சிந்திக்கும் அளவு பெரியதல்ல” என்று ஐரா கூறியுள்ளார். இவரது நம்பிக்கையான பேச்சுக்கு பாலிவுட் வட்டாரம் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments