நிதி திரட்டுவதற்காக செஸ் மாஸ்டருடன் போட்டிப்போடும் பிரபல பாலிவுட் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அமீர்கான் கொரோனா நேரத்தில் நொடிந்துபோய் இருக்கும் மக்களுக்கு நன்கொடை வழங்கும் வகையில் நிதி திரட்டி வருகிறார். இதற்காக அவர் 5 முறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துடன் இணைந்து செஸ் விளையாட உள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அதோடு ஆக்சிஜன் பற்றாக்குறை, சிகிச்சை பற்றாக்குறை எனப் பல்வேறு நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறோம். இதனால் சினிமா பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் எனப் பலரும் நன்கொடைகளை வழங்கி உதவ முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் அமீர்கான் அவர்கள் இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டராக வலம் வரும் விஸ்வநாதன் ஆனந்த்துடன் இணைந்து செஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி அதன் மூலம் நன்கொடை திரட்டும் முயற்சியில் ஈட்டுள்ளார். இந்த முயற்சிக்காக செஸ்.காம்.இந்தியா எனும் நிறுவனம் ஒரு கண்காட்சி போட்டியை நடத்த உள்ளது.
வரும் ஜுன் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த்துடன் நடிகர் அமீர்கான் மோத உள்ளார். மேலும் இந்தப் போட்டியை யூடியூப் சேனலான செஸ்.காம் ஸ்ட்ரீமிங் செய்து ஒளிப்பரப்ப இருக்கிறது. ஏற்கனவே செஸ் விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்ட நடிகர் அமீர்கான் இந்தப் போட்டியில் விளையாடுவது குறித்து அவரது ரசிகர்கள் பலரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மேலும் கவனத்தை ஈர்த்து நன்கொடை திரட்டும் முயற்சியில் அமீர்கான் ஈடுபடுவார் என்றும் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com