close
Choose your channels

அஜீத் கெட்டப்பில் அமீர்கான் நடிக்கும் 'டங்கல்'?

Sunday, September 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வருட இறுதியில் 'பிகே' என்னும் இந்தியாவின் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அவருடைய அடுத்த படமான 'டங்கல்' (Dangal) படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லூதியானாவில் தொடங்கியது.

இந்த படத்தில் அமீர்கான் தந்தை மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கின்றார். பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர் மகாவீர்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்திற்காக அமீர்கான் 20 கிலோ எடையை அதிகரித்துள்ளார். தற்போது அமீர்கான் 95 கிலோ எடையுள்ளதாக கூறப்படுகிறது. தந்தை வேடத்திற்காக இந்த எடையுடன் வரும் டிசம்பர் மாதம் வரை இருக்கபோவதாகவும், அதன்பின்னர் மீண்டும் மகன் வேடத்திற்காக உடம்பை குறைத்து அதன்பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

பிரபல தொலைக்காட்சி நடிகை சாக்ஷி தன்வார் அமீர்கானின் மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஃபாத்திமா சனா சாயிக் மற்றும் சான்யா மல்ஹோத்ரா ஆகிய இரண்டு புதுமுகங்கள் அமீர்கானுக்கு மகள்களாக நடிக்கின்றனர்.

மேலும் தந்தை வேடத்திற்காக அவர் தேர்வு செய்துள்ள கெட்டப் கிட்டத்தட்ட அஜீத்தின் வீரம்' கெட்டப் போன்று உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அஜீத் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment