கமல் கட்சியுடன் கூட்டணி சேரும் டெல்லி கட்சி: பிப்ரவரி 21ல் அறிவிப்பா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து போட்டியிட போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த தேர்தலில் புதிய கட்சியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது ஒரு சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி மூன்றாவது அணியாக இணைந்து போட்டியிடுமா? என்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும்
இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி உடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் அன்றைய தேதியில் நடைபெறும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout