கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வரின் பிரதிநிதி திடீர் சந்திப்பு
- IndiaGlitz, [Tuesday,July 18 2017]
உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சொற்பொர் நடந்து வருகிறது. தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை கமல் சுட்டிக்காட்டியதற்கு அமைச்சர்கள் அவரை மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த போக்கிற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியை தோற்றுவித்தவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பரும், தமிழக ஆம் ஆத்மி தலைவருமான வசீகரன் நேற்று கமல்ஹாசனை திடீரென சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தமிழக அரசியல் நிலை குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமதியின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக கமல்ஹாசன் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக ஆம் ஆத்மி தலைவர் அவரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.