close
Choose your channels

'சர்கார்' படத்தில் இணையும் 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி

Saturday, August 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில்  ஒரு பாடல் காட்சி உள்பட ஒருசில காட்சிகளை படமாக்க படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர். 

இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் இன்று அமெரிக்கா கிளம்புவார் என்றும், வரும் 6ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு இந்த பாடல் காட்சி படமாக்கப்படும் என்றும் தெரிகிறது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் படமாக்கப்படவுள்ள இந்த பாடல் காட்சிக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜயின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் பணிபுரிந்த விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், ஷோபி மாஸ்டர் ஆகியோர் மீண்டும் 'சர்கார்' படத்தில் இணைவது பெரும் எதிர்பார்ப்பை இந்த பாடல் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை வரலட்சுமியும் அமெரிக்கா செல்லவுள்ளதால் அவரும் இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் பிரமாண்டமாக இயக்கி வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment