'அசுரன்' பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
- IndiaGlitz, [Tuesday,April 09 2019]
தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ், இந்த படத்தில் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒருசில பாடல்களை எழுதும் பாடலாசிரியர் குறித்த தகவலை அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் பாடலாசிரியர் ஏகாதேசி ஓருசில பாடல்களை எழுதவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த 'ஆடுகளம்' படத்தில் 'ஒத்த சொல்லால' என்ற பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆடுகளம்' டீம் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
My most fav combination writer who wrote #othasollala the amazing #Egadesi #yegadesi will be writing lyrics for few trks in #asuran @dhanushkraja @theVcreations @VetriMaaran #GV71 audio work on progress
— G.V.Prakash Kumar (@gvprakash) April 9, 2019