பாலைவன புயல்.. உயிரை காக்க போராடும் ஹீரோ.. அசர வைக்கும் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்.!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது
வீட்டின் வறுமை காரணமாக அரபு நாட்டுக்கு செல்லும் ஹீரோ அங்கு ஆடு மேய்க்கும் வேலையை பார்க்கும் நிலை ஏற்பட, பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் போது பாலைவன புயலில் சிக்கி கொள்ளும் பிருத்விராஜ் அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் காட்சிகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.
’யாராலும் வெளியே செல்ல முடியாது’ என வசனத்தை தவிர வேறு எந்த வசனங்களும் இந்த டிரைலரில் இல்லை என்றாலும் ஒரு தனி நபரின் போராட்டம் மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அமலாபால் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள நிலையில் தண்ணீரில் அவர் நீச்சல் அடிக்கும் காட்சியும் உள்ளது. மொத்தத்தில் ஒரு தேசிய விருது பெறும் அளவுக்கு தரமான நடிப்பை தந்துள்ள பிரித்விராஜ் சுகுமாரனுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com