close
Choose your channels

'ஆடுஜீவிதம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை எப்போது நெருங்கும்?

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான ’ஆடுஜீவிதம்’ திரைப்படம் நேற்று வெளியாகி முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பிரபலமான ’ஆடுஜீவிதம்’ என்ற நாவலை இயக்குனர் பிளஸ்சி திரைப்படமாக எடுத்து உள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார் என்பதை கேரக்டராக வாழ்ந்துள்ளார் என்று விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதேபோல் அமலா பால் நடிப்பு, ஏஆர் ரகுமானின் இசை, சுனில் ஒளிப்பதிவு, இயக்குனரின் மேக்கிங் என இந்த படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. மலையாளத்தில் உருவாகியிருந்தாலும் இந்த படம் தமிழ் உள்பட பான் இந்திய திரைப்படமாக வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.80 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் ’ஆடுஜீவிதம்’ வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.15 கோடி என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 8.5 கோடியும் வெளிநாடுகளில் 6.50 கோடியும் இந்த படம் வசூலித்ததாக தெரிகிறது. மேலும் இன்று புனித வெள்ளி விடுமுறை, சனி ஞாயிறு விடுமுறை என்பதால் அடுத்த மூன்று நாட்களில் இந்த படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்றும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களிலேயே இந்த படத்தின் பட்ஜெட் முழுவதும் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment