மூன்றே நாட்களில் இத்தனை கோடியா? 'ஆடுஜீவிதம்' வசூல் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரித்விராஜ் குமாரன், அமலாபால் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான ‘ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் 3 நாட்களில் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் தான் ‘ஆடுஜீவிதம்’ என்ற பெயரில் திரைப்படம் ஆகியுள்ளது. இந்த படம் இயக்குனர் பிளஸ்சியின் 14 ஆண்டுக்கு அளவு என்றும் கூறப்பட்டது. இந்த படத்தை பார்த்த மணிரத்னம், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்தது என்பதும் முதல் நாளே இந்த படம் சாதனை வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மலையாளத்தில் வெளியான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ ’பிரேமலு’ ஆகிய படங்கள் வசூல் சாதனை செய்த நிலையில் தற்போது ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் மூன்றே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் உள்பட மற்ற மொழி படங்கள் வசூல் செய்ய திணறி கொண்டிருக்கும் நிலையில் சர்வ சாதாரணமாக மலையாள படங்கள் மிகப்பெரிய வசூல் செய்து வருகிறது என்பதும் அதற்கு காரணம் அவர்கள் தேர்வு செய்யும் அதைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மூன்றே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்த ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் நூறு கோடி ரூபாய் என்ற இலக்கை தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mollywood’s Fastest 50 Cr Movie - #Aadujeevitham - 4 Days !
— South Indian BoxOffice (@BOSouthIndian) March 31, 2024
Broken the 5 Year old Record of #Lucifer ✅
3 Days Worldwide Gross is ₹49 Crores Apprx
Unbelievable Collection Without Rest of GCC Release 🙏🏻🙏🏻#TheGoatLife #PrithvirajSukumaran pic.twitter.com/PrBmNBrpi6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments