கவின் - இளன் படத்தின் நாயகிகள் இந்த இரு நடிகைகளா?

  • IndiaGlitz, [Thursday,September 07 2023]

நடிகர் கவின் நடிப்பில், இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஸ்டார்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

யுவன் சங்கர் ராஜா இசையில், எழிலரசு ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் ஒருவர் பாலிவுட் நடிகை என்றும் இன்னொருவர் மாடல் அழகி என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் தகவல் படி இந்த படத்தில் அதிதி பொஹங்கர் மற்றும் பிரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் அதிதி பொஹங்கர், ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீத்தி முகுந்தன் பிரபல மாடல் அழகியாக உள்ளார். இந்த இரு நடிகைகள் ’ஸ்டார்’ படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ஆட்டம் ஆரம்பம்.. 'கமல் 233' படத்தின் மாஸ் வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக  சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்

ஸ்டார் படங்களின் அலையில் அடித்துப் போகும்  சிறு படங்கள்..  நாளை வெளியாகும் படம் குறித்து சுரேஷ் காமாட்சி ஆதங்கம்..!

 ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறுபடங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது என்று நாளை வெளியாக இருக்கும் சேரனின் 'தமிழ்க்குடிமகன்' படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம்

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் இன்று காலை 6 மணிக்கு சிறப்புக் காட்சிகள் தொடங்கிய நிலையில், பார்வையாளர்களால் பெரிய கொண்டாடப்பட்டு வருகிறது.

உயிர் மற்றும் உலகம் உடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய நயன்தாரா.. க்யூட் புகைப்படம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில்  கணக்கு தொடங்கினார் என்பதும் முதல் வீடியோவாக தனது மகன்கள் உயிர் மற்றும் உலகு ஆகியோருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்

உங்களுடன் 'லியோ' படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்: பிரபல நடிகருக்கு அழைப்பு விடுத்த லோகேஷ்..!

பிரபல நடிகருக்கு உங்களுடன் 'லியோ' படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.