ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு… நன்மைகள் குறித்து விளக்கும் சிறப்பு வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
“கோடி நன்மைதரும் ஆடி மாதம்” என்று நமது முன்னோர்கள் ஆடி மாதத்தைப் பற்றி சிறப்பாகக் கூறுகின்றனர். காரணம் இந்த ஆடி மாதத்தில்தான் அனைத்து விவசாய வேலைகளும் துவங்குகிறது. அதேபோல சாஸ்திரப்படி ஆடி மாதத்தில் திருமண விசேசங்கள் எதுவும் செய்யாமல் தெய்வங்களுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆடி மாதத்தில் அதுவும் வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வீட்டில் உள்ள பெண்கள் வழிபாடு நடுத்துகின்றனர். இந்த வழிபாடுகளினால் தொழில், விவசாயம் போன்றவை சிறக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதைத்தவிர ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமைகள் அனைத்தும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் அந்தந்த தினத்திற்கு ஏற்றவாறு பூஜைகளையும் நாம் செய்து வருகிறோம்.
மேலும் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு உகந்த கேழ்வரகு கூழை தயாரித்து அனைவருக்கும் கொடுத்து வருகிறோம். அதோடு மகாலட்சுமிக்கு உகந்த குத்துவிளக்கு வழிபாட்டையும் வீடுகள் தோறும் செய்து வருகிறோம். இதனால் ஆடி மாத சிறப்பு வழிபாடு குறித்தும், இதன் நன்மைகள் குறித்தும் பாரதி ஸ்ரீதர் அவர்கள் நமக்கு விளக்கம் அளிக்கிறார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout