தனுஷ் செய்த உதவிக்காக நன்றி கூறிய சிம்பு பட இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா நடித்து வரும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக ஏற்கனவே பிரபுதேவா வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை இரவு 7 மணிக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளதாகவும் இதற்கு ஒப்புக் கொண்ட தனுஷிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
‘காதலன் ரிட்டன்ஸ்’ என்று விளம்பரப்படுத்தப்படும் இந்த படத்தில் பிரபுதேவா முதல் முறையாக பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்றும் இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு புது அனுபவமாக இருந்தது என்றும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பிரபுதேவா குறிப்பிட்டிருந்தார் என்பது தெரிந்ததே. இந்தநிலையில் நாளை பர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியானவுடன் ’காதலன் ரிட்டன்ஸ்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பது தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Special thanks to @dhanushkraja sir❤️????for accepting to launch our 1st look. Feeling excited&nervous??Crossing my tough phase was a very difficult task,I thank God&Universe,Big thanks to @PDdancing 4attempting a new genre,can’t wait2show u all a new Prabu master #Kadhalanreturns pic.twitter.com/jyBWXCptXK
— Adhik Ravichandran (@Adhikravi) February 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments