தனுஷ் செய்த உதவிக்காக நன்றி கூறிய சிம்பு பட இயக்குனர்!

  • IndiaGlitz, [Thursday,February 13 2020]

சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா நடித்து வரும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக ஏற்கனவே பிரபுதேவா வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை இரவு 7 மணிக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளதாகவும் இதற்கு ஒப்புக் கொண்ட தனுஷிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘காதலன் ரிட்டன்ஸ்’ என்று விளம்பரப்படுத்தப்படும் இந்த படத்தில் பிரபுதேவா முதல் முறையாக பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்றும் இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு புது அனுபவமாக இருந்தது என்றும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பிரபுதேவா குறிப்பிட்டிருந்தார் என்பது தெரிந்ததே. இந்தநிலையில் நாளை பர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியானவுடன் ’காதலன் ரிட்டன்ஸ்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பது தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பப்ஜிக்கு அடிமையாகி பணத்திற்காக பாட்டியை கொன்ற சென்னை இளைஞர் கைது!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பாட்டியை கொலை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர் 

தம்பி முறை உள்ளவருடன் கள்ளக்காதல்: 4 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோ.குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரி என்பவருக்கும்

விஜய்யின் 'குட்டிக்கதை' ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் ரிலீஸ் ஆகும் சிம்பு பாடல்!

தளபதி விஜய் நடிப்பில், அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாஸ்டர்' படத்தின் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டி கதை' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது

'ஒரு குட்டிக்கதை' பாடல் இப்படித்தான் இருக்கும்: அனிருத் வீடியோ!

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் 'ஒரு குட்டி கதை' என்ற பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை

சூர்யா ஒரு பதுங்கும் புலி, விரைவில் பாய்வார்! சிவகுமார் ஆவேச பேச்சு

சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படத்தின் பாடல் ஒன்று இன்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த விழாவில் சூர்யாவின் தந்தை சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: