ஒவ்வொரு ஆண்டும் அஜித்திற்காக காத்திருப்பேன்: ஆதிக் ரவிச்சந்திரனின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,December 29 2024]

ஒவ்வொரு ஆண்டும் அஜித் அவர்களின் குரலை கேட்பதற்காக திரையரங்கில் காத்திருப்பேன் என்றும், அவருடைய படத்தை இயக்கியதன் மூலம் டப்பிங் போது அவருடைய குரலை நேரில் கேட்டேன் என்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து உருவாக்கி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி விட்டதாக தெரிகிறது.

முதல்கட்டமாக அஜித் டப்பிங் பணிகளை செய்த நிலையில், இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில், ஒவ்வொரு ஆண்டும் திரையரங்கில் அஜித் அவர்களின் குரலை கேட்க நான் காத்திருந்தேன். இப்போது கடவுளின் கருணையுடன் உங்களுடன் டப்பிங் பணியில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இந்த ஆண்டு ஒரு அழகான ஆண்டாகவும், ஒரு நல்ல பசுமையான பயணமாகவும் ’குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் தொடங்கி முடிவடைந்து விட்டது. இந்த நினைவுகளை நான் என் மனதில் எப்போதும் காப்பாற்றிக் கொள்வேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

More News

அட்லி, ஏஆர் முருகதாஸை அடுத்து பாலிவுட் செல்லும் வெங்கட் பிரபு.. மாஸ் நடிகர் தான் ஹீரோ..!

தமிழ் திரை உலகை சேர்ந்த இயக்குனர்கள் பாலிவுட்டில் படங்களை இயக்கி வரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'விடாமுயற்சி' பாடகர் அந்தோணி தாசன், மனைவியுடன் ரொமான்ஸ்.. வைரல் வீடியோ..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை பாடிய அந்தோணி தாசன் தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

'சிறகடிக்க ஆசை' சீரியலை முந்திய சன் டிவியின் புதிய சீரியல்.. இந்த வார டிஆர்பி நிலவரம்..!

சமீபத்தில் அறிமுகமான புதிய சீரியல்கள் டாப் 10 இடத்தை பிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவது வைல்ட் கார்ட் போட்டியாளரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில்

ரஜினி படத்தில் மீண்டும்  தமன்னா? இன்னொரு பிரபல நடிகையும் இணைகிறாரா?

ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் தமன்னா ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும், அவரது அந்த கேரக்டர் அந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.