லிங்குசாமி தெலுங்கு படத்தின் வில்லன் இந்த தமிழ் ஹீரோ தான்: அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]

ஆனந்தம், ரன், அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக தெலுங்கு பிரபல நடிகர் ராம்பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதையும் பார்த்தோம்

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம் பொத்தினேனி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் என்பதும் இந்த படத்தில் நதியா உள்பட பலர் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் யார் என்ற கேள்வி எழுந்து எழுந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக ஆர்யா, மாதவன் உள்பட ஒருசிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் ஹீரோக்களில் ஒருவரான ஆதி நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ஆதி தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் நவீன் நூலி படத்தொகுப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.