திடீரென ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு.. ஆதியின் 'பார்ட்னர்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,July 02 2023]

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள ‘பார்ட்னர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யோகி பாபுவின் திருட்டு கூட்டத்தில் சேரும் ஆதி, தனிமையில் இருக்கும் ஒரு வீட்டில் திருடப் போகும் போது விபரீதம் ஏற்படுகிறது. இந்த விபரீதம் காரணமாக யோகி பாபு திடீரென ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அதன் பிறகு ஏற்படும் பிரச்சனை என்ன? ஹன்சிகா மீண்டும் யோகி பாபுவாக மாறினாரா? என்பதை காமெடியுடன் கூறி இருக்கும் திரைப்படம் தான் ‘பார்ட்னர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதி, யோகி பாபு, ஹன்சிகா, ஆகிய மூவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் பாலக் லால்வாணி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சபீர் அகமது ஒளிப்பதிவாளராகவும் பிரதீப் ராகவ் பட தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.