சென்னையில் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்: தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் தெரிந்ததே. திருமண நிச்சயதார்த்தம் குறித்த வீடியோவை நிக்கி கல்ராணி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்த நிலையில் அந்த வீடியோ வைரல் ஆனது.
இந்த நிலையில் ஆதி-நிக்கி திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் திருமணம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் தமிழ் தெலுங்கு திரையுலகினர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மே 18ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைய உள்ள நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments