திருமணத்திற்கு முன் அஜித்தின் சூப்பர்ஹிட்  பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆதி-நிக்கி கல்ராணி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,May 18 2022]

தமிழ் திரையுலகில் ஏற்கனவே பல நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் திருமணத்திற்கு முன் நலங்கு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் இருவருக்கும் மஞ்சள் தண்ணீரால் குளிப்பாட்டிய நிலையில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இந்த வீடியோவே ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண நிகழ்ச்சிக்கு ஆர்யா - சாயிஷா ஜோடி கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மெட்ரோ சிரிஷ், நானி உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டனர்.