செத்தால் கூட இனி ஆதார் எண் வேண்டும்: மத்திய அரசின் அடாவடி

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தேவைக்கும் இனி ஆதார் அட்டை தேவை என்ற நடைமுறை வந்துவிட்டது. ஆதார் இல்லை என்றால் இனி உயிர் வாழ முடியாது என்ற நிலை கிட்டத்தட்ட தற்போது உள்ளது.
இந்த நிலையில் இனி இறந்தாலும் ஆதார் அட்டை தேவை என்று மத்திய அரசு அடாவடியாக அறிவித்துள்ளது. ஒருவர் இறந்துவிட்டால் அவர் இறந்த பின்னர் அவருடைய உறவினர்கள் இறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றால் இறந்த நபரின் ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என்ற நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி ஆதார் அட்டை இல்லை என்றால் நிம்மதியாக சாக கூட முடியாது
இறந்த ஒருவருக்கு ஆதார் அட்டை இல்லாவிட்டால் இறப்பு சான்றிதழ் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நபருக்கு ஆதார் இல்லை என்று குறிப்பிட்டால் இறப்பு சான்றிதழ் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை