பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,June 09 2017]
வங்கிக்கணக்கு, ரேசன் கார்டு, கேஸ் இணைப்பு உள்பட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆதார் எண் கட்டாயம் என்பது ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே பலமுறை சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியும் இந்த நிலை மாறாவில்லை
இந்த நிலையில் சமீபத்தில் வருமான வரி கணக்கு செலுத்துவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் வருமான வரி செலுத்துவோர் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.
இன்படி 'பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், பான் கார்டுடன், ஆதார் எண் இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும் என்றும் பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கக்கூடாது என்றும் இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும்' என்றும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.