சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை? என்னதான் நடக்குது
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் என்பதும், ஆதார் அட்டை இல்லையென்றால் பல அடிப்படை சலுகைகளை இழக்க நேரும் நிலையும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆதார் அட்டையை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் ஆதார் அட்டை காரணமாக விஐபிக்கள் உள்பட பலரது ரகசியங்கள் வெளியே தெரியும் அவலமும் நடந்து வருகிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் ஆதார அட்டை தகவல்கள் கசிந்து அதனால், அவரது மனைவி சாக்ஷி அதிருப்தி தெரிவித்திருந்ததும் இதனால் சர்ச்சை ஏற்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
இருப்பினும் ஆதார் அட்டையினால் பல போலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆதார் அட்டையில் கண்ணின் கருவிழி மற்றும் கைரேகை இருப்பதால் அதில் போலி உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் கடந்த 80களில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக விளங்கி கடந்த 1996ல் தற்கொலை செய்து தனது வாழ்க்கையை முடித்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் பெயரில் ஆதார் அட்டை வழங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்க் ஸ்மிதா கடைசியாக குடியிருந்த சென்னை தி.நகர் வீட்டு முகவரியில் அவரது இயற்பெய்ரான விஜய லட்சுமி ராமலு என்ற பெயருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை பெறுவதற்கு கருவிழி மற்றும் கைரேகை அவசியம் என்ற நிலையில் மறைந்த சில்க்ஸ்மிதான் கருவிழி மற்றும் கைரேகையை அதிகாரிகள் எப்படி பெற்றனர் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments