ஆதார் அட்டை கட்டாயமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

இந்திய குடிமகன் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று அவ்வப்போது வெளிவரும் அரசின் உத்தரவுகள் உறுதி செய்து வருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெற, வங்கி கணக்கு தொடங்க, ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, பான் அட்டை பெறுவது உள்பட அனைத்திற்கு தற்போது ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. மேலும் விரைவில் புதிய சிம் வாங்கவும், டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும் ஆதார் அட்டை வேண்டும் என்ற நிலை வரவிருக்கின்றது. போகிற போக்கை பார்த்தால் சாலையில் நடப்பதற்கு கூட ஆதார் அட்டை கேட்கும் நாள் தொலைவில் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் காமெடியாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்களில் சலுகை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சற்றுமுன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'அரசின் நலத்திட்டங்களில் சலுகை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில் வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் என்பதை தடுக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.