ஒரு தளபதி உருவாக எத்தனை வருசம்? பிரபல கவிஞரின் மகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் புரமோ வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த புரமோ வீடியோவில், 'ஒரு குழந்தை உருவாகறதுக்கு பத்து மாதம், ஒரு பட்டதாரி உருவாகறதுக்கு மூணு வருஷம், ஆனால் ஒரு தலைவன் உருவாகறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது' என்ற மாஸ் வசனம் இடம்பெற்றிருக்கும். இந்த வசனத்தை பாராட்டியும் கேலி செய்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் கவிப்பேரரசு கண்ணதாசனின் வாரிசும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் இந்த வசனத்தை மையமாக வைத்து 'ஒரு தளபதி உருவாக எத்தனை வருசம்? இந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் கிடைப்பது என்பது எளிதான விஷயம் இல்லை' என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
ஆதவ் கண்ணதாசனின் இந்த கருத்தை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவதால் தற்போது அவரது பெயர் டிரண்டுக்கு வந்துள்ளது. ஆதவ் கண்ணதாசன் 'பொன்மாலை பொழுது, யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments