சந்தானம் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்
Send us your feedback to audioarticles@vaarta.com
'தில்லுக்கு துட்டு 2' படத்தை அடுத்து சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
அதன்படி சற்றுமுன் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'A1' என்றும் அதன் கீழே அக்யூஸ்ட் நம்பர் 1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த படமும் காமெடி கலந்த எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலில் இருந்து தெரியவருகிறது.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தாரா அலிஷா நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் என்பதும் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜான்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவில் லெட் ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்கின்றார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Here we go the first look of #A1 directed by #Johnsonk co-starring #TaraAlishaBerry produced by @rajnarayanan11 #A1FirstLook #Circleboxentertainment @circleboxE Music by @Music_Santhosh @proyuvraaj DOP @GopiJegadees77 ???? pic.twitter.com/Ou4sNPz6uz
— Santhanam (@iamsanthanam) March 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com