என்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இளைஞர் ஒருவர் கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்தப் பாம்பு தன்னைக் கடித்துவிட்டதாக மருத்துவர்களிடம் கூறி சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் கடும் பதற்றம் அடைந்துள்ளனர்.
பெல்லாரி அடுத்த கம்புளி பகுதியில் வசித்துவரும் இளைஞர் ஒருவரை புதரில் இருந்த பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே இளைஞர் தனது நண்பருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மேலும் தன்னை இந்தப் பாம்புதான் கடித்துவிட்டது என மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்து மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் கடும் பதற்றம் அடைந்துள்ளனர்.
கூடவே கையில் பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு இளைஞர் வந்த காட்சியை சிலர் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. இதுகுறித்துப் பேசிய அந்த இளைஞர் தன்னைக் கடித்த பாம்பு வேறு யாரையும் கடித்துவிடக் கூடாது என நினைத்து பயத்தில் பிடித்து விட்டேன். அதைத் தற்போது காட்டுப் பகுதியில் விட்டுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் பாம்பைக் கையில் அசால்ட்டாகப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
A youth walked into PHC in #Kampli taluk with a cobra which had bitten him. Being treated at VIMS in #Ballari Snake was released back to nature @santwana99 @ramupatil_TNIE @BoskyKhanna @KiranTNIE1 @XpressBengaluru @KannadaPrabha @NammaKalyana @karnatakacom @NammaBengaluroo pic.twitter.com/T0w2lSFhFz
— Amit Upadhye (@Amitsen_TNIE) June 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments