திருமண நாளில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரியகுளம் அருகே முதலாம் திருமண நாளில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத வகையில் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி புதுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 30 வயது சுரேஷ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவு பெறுவதை அடுத்தும், இவருடைய மனைவியின் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளவும் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்த நிலையில் நேற்று வைகை அணைக்கு நண்பர்களுடன் சென்ற சுரேஷ் அங்கு குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத நிலையில் ஆழம் அதிகமான பகுதிக்கு சென்றுவிட்டார். தன்னை காப்பாற்றும்படி நண்பர்களிடம் அவர் கத்தினார். இதனையடுத்து அவருடைய நண்பர்கள் சுரேஷின் உயிரை காப்பாற்ற போராடினர். ஆனால் அதற்குள் சுரேஷ் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கியதால் மூச்சு முட்டி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி சுரேஷின் உடலை மீட்டனர். திருமண நாளை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் பரிதாபமாக பலியானது அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments