முதல் போட்டியிலேயே அடித்து நவுத்திய இஷான் கிஷன்! குவியும் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மெதோரோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் படு தோல்வியடைந்த இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது. அதிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே இஷான் கிஷன் அரைச்சதம் விளாசி இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
நேற்றைய டி20 ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 164 என்ற இலக்கை நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் நேற்றைய ஆட்டத்தையே துவம்சம் செய்தனர். அதிலும் 32 பந்துகளுக்கு 4 டவரிங் சிக்சர்களுடன் அரைச்சதம் கண்ட இஷான் கிஷானை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர். மேலும் நேற்றைய போட்டியில் இஷான் கிஷன் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
அதோடு ரிஷப் பந்த் 13 பந்துகளுக்கு 2 சிக்சர் மற்றும் 26 ரன்களை எடுத்து இருந்தார். விராட் கோலி 46 பந்துகளுக்கு 3 சிக்சர் மற்றும் 73 ரன்களை எடுத்து நாட் அவுட் ஆகாமலேயே இருந்தார். இதனால் 164 என்ற இலக்கை நேற்று இந்திய அணி துச்சமாக கடந்து விட்டது எனலாம்.
இந்நிலையில் ரோடு சேஃபடி கிரிக்கெட் தொடரில் ஆடிவரும் முன்னாள் நட்சத்திர வீரர் சேவாக் இஷான் கிஷனை மனதாரப் பாராட்டி உள்ளார். “ஜார்கண்டில் இருந்து இன்னொரு அச்சமற்ற வீரர் நமக்கு கிடைத்துள்ளார். முன்னாள் களம் இறக்கப்பட்டார். தற்போது தன் திறமையை நிரூபித்தார். இதற்கு முன்னரும் இப்படி நடந்துள்ளது. இஷான் கிஷனின் அச்சமற்ற தாக்குதல் பேட்டிங்கை நேசிக்கிறேன். எனக் கூறி இஷான் கிஷனின் ஷாட் புகைப்படத்தையும் சேவாக் தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
A young keeper batsman from Jharkhand promoted up the batting order and proving his caliber. This has happened before.
— Virender Sehwag (@virendersehwag) March 14, 2021
Loved the fearlessness and attacking batting of Ishan Kishan. pic.twitter.com/874tXa0uoz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com