'கோட்' திரைப்படத்தில் கேப்டனுக்கு வாய்ஸ் கொடுத்தவர் இந்த பிரபல நடிகரா?

  • IndiaGlitz, [Monday,September 09 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் தோன்றும் நிலையில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தது தமிழ் திரை உலகின் பிரபல ஹீரோ என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இரண்டே நாட்களில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கோட்’ படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சிகள் தோன்றும் போது திரையரங்கமே அதிரும் என்பதும் அவரது காட்சியை மிகவும் சிறப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வடிவமைத்து இருந்தார் என்று விமர்சனங்கள் எழுந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் தமிழ் திரையுலகின் இளம் ஹீரோ மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மணிகண்டன் ஏற்கனவே மிமிக்ரி கலைஞர் என்பதும் பல மேடைகளில் அவர் விஜயகாந்த் உட்பட பல பிரபலங்களின் குரல்களில் பேசி உள்ளார் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் மிகவும் பொருத்தமாக அவர் ’கோட்’ திரைப்படத்தின் விஜயகாந்த் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

'ராட்சசன்' பட தயாரிப்பாளர் திடீர் மறைவு.. அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்..!

விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' உட்பட சில வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு திடீரென காலமானதை அடுத்து கோலிவுட் திரை உலகம் அதிர்ச்சியில் உள்ளது.

'கோட்' ஓடிடி ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா? விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் 3 மணி நேரம் என்று இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்

எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்: நடிகர் சங்க கூட்டத்தில் ரோகிணி..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் யாராக இருந்தாலும் தைரியமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

திருடன் கேரக்டருக்கு நேதாஜி பெயரா? 'கோட்' படத்திற்கு பாஜக பிரபலம் கண்டனம்..!

'கோட்' திரைப்படத்தில் இடம்பெற்ற திருடன் கேரக்டருக்கு நேதாஜி பெயர் வைப்பதா என கண்டனம் தெரிவித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

'வேட்டையன்' பாடலை பாடியவர் இவர் தான்.. அசத்தல் அனிருத்.. புரமோ வீடியோ ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் ஒருவர் பாடி இருப்பதாக