பார்த்திபனுடன் இணைவாரா 'நேரம்' நிவின்பாலி?
Send us your feedback to audioarticles@vaarta.com
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரபல மலையாள மலையாள நடிகர் நிவின்பாலி, மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். 'நேரம்' படத்தில் நஸ்ரியாவுடன் ரொமான்ஸ் மற்றும் த்ரில் சேஸிங் காட்சிகளில் அற்புதமாக நடித்த நிவின்பாலி மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ், மிலி, ஒரு வடக்கன் செல்பி போன்ற வெற்றி படங்களை சமீபத்தில் கொடுத்தவர். மேலும் நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை அடுத்து பார்த்திபன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நிவின் பாலி, முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொச்சி சென்ற பார்த்திபன், நிவின்பாலியை நேரில் சந்தித்து கதை கூறியதாகவும், அதற்கு நிவின்பாலி தரப்பில் இருந்து பாசிட்டிவ் அப்ரோச் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை பார்த்திபன் தரப்பினர் உறுதி செய்துள்ளனர். தற்போது பார்த்திபன் ஆறு கதைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், இதில் எந்த கதையில் நிவின் பாலி நடிப்பார் என்பது விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. புதிய திரைப்படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை செய்து வரும் பார்த்திபன், விஜய் சேதுபதி-நயன்தாரா நடிக்கும் 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com