சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு உள்பட ஒருசிலர் நடித்து வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இளம் நடிகை மிர்னா மேனன் என்பவர் இணைந்து உள்ளதாகவும் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜீ5 டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ஆனந்தம்’ என்ற சீரியலில் இவர் நடித்துள்ளார் என்பதும் ’சந்தனத்தேவன்’ என்ற தமிழ் படத்திலும் ’பிக் பிரதர்’ என்ற மலையாள படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.