Butterfly effect என்பது இதுதானா? 10,000 ஏக்கர் காட்டையே அழித்துவிட்ட இளம்பெண்!

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

கலிபோர்னியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரால் 10,000 ஆயிரம் ஏக்கர் காடு தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பெண் வேண்டுமென்று செய்யாமலே இந்த விபரீதம் நடந்திருப்பதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் ஒரு செயல் மற்றொருவரின் வாழ்வில், ஏன் நமக்கே அது பெரிய மாற்றத்தைக் கொடுத்துவிடும். அதற்குப் பெயர்தான் Butterfly effect என்று சொல்வார்கள். அப்படித்தான் தனக்கே தெரியாமல் செய்த ஒரு காரியத்தால் 10,000 ஆயிரம் ஏக்கர் காட்டை அழித்து விட்டிருக்கிறார் அலெக்பொண்ட்ரா சூவர்னேவா எனும் இளம்பெண்.

வட கரோலினா பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கவுன்டியில் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது அலெக்பொண்ட்ராவிற்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தண்ணீர் இருக்கும் குட்டையைத் தேடி அலைந்திருக்கிறார். ஒரு குட்டையில் கரடியின் சிறுநீர் கலந்தபடி தண்ணீர் இருந்திருக்கிறது. எனவே தனது டீ பையைப் பயன்படுத்தித் தண்ணீரை சூடு படுத்த முயற்சித்து இருக்கிறார். ஆனால் அந்த முயற்சி வீணாக, தண்ணீரை அப்படியே குடித்துவிட்டு தனது வேலையை தொடர்ந்து இருக்கிறார்.

ஆனால் அலெக்பொண்ட்ரா மூட்டிய சிறு தீயில் கிட்டத்தட்ட 9,850 ஏக்கர் பரப்பளவுள்ள காடு தீப்பற்றி எரிந்திருக்கிறது. இதையடுத்து பதறிப்போன பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுப்பதற்குள் கட்டுக்கடங்காமல் தீப்பற்றி கொழுந்து விட்டெரிந்திருக்கிறது. இந்தத் தீக்கிடையில் மயங்கிக் கிடந்த அலெக்பொண்ட்ராவையும் போலீசார் மீட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.