நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு,..!

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் பவர்ஸ்டார் சீனிவாசன். மருத்துவரான இவர் 2010 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். ’லத்திகா’ என்ற படத்தை தயாரித்து நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன் அதன் பிறகு சந்தானத்துடன் ஒரு சில படங்களில் இணைந்து நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக இறால் பண்ணை அதிபரை ஏமாற்றிய செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் இரண்டு முறை ஆஜராகாததை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் அவரை அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என சென்னை அண்ணாநகர் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்

More News

ஆணென்ன?பெண்னென்ன? நயன்தாரா போல் நாமும் செயல்படுவோம்: வெள்ள மீட்பு பணி குறித்து பார்த்திபன்

திருமதி நயன்தாரா உட்பட பலரும்  வெள்ளத்தால் சிக்கிய மக்களின் தேவை அறிந்து  செயல்பட்டது போல் நாமும் செயல்படுவோம். இதில் ஆணென்ன?பெண்னென்ன?

விஷ்ணுவை வச்சு செய்யும் விஜய் வர்மா.. 5 ஸ்டாருக்கான ஆவேசமான வாதம்..!

பிக் பாஸ் வீட்டில் தற்போது 5 ஸ்டார்களுக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அந்த ஸ்டார்களை கைப்பற்ற போட்டியாளர்கள் குழு தீவிரமாக விளையாடி வருகிறது.  விஷ்ணு, விஜய் வர்மா, அர்ச்சனா, ரவீனா, மணி,

'கேஜிஎஃப்' புகழ் யாஷின் 19வது படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு..! ரிலீஸ் தேதி இதுதான்..!

கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ் என்பதும்  இவரது அடுத்த படமான 'யாஷ் 19' படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகும்

இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர்: சென்னை புயல் குறித்து கமல்ஹாசன்..!

சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரமே நிலை குலைந்தது என்பதும் பல இடங்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்

தொடர்ச்சியாக தனுஷ் படங்களுக்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்.. என்னென்ன படங்கள்?

 தனுஷ் நடிக்கும் மூன்று திரைப்படங்களுக்கு அடுத்தடுத்து ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.