மேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,January 19 2021]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் அவர் இறுதி நாளன்று வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிங்கப்பெண்ணாக வெளியேறி வீட்டுக்குச் சென்றபோது அவரை அவரது குடும்பத்தினர் சிறப்புடன் வரவேற்றி அசத்தினர்.

ரம்யா பாண்டியன் காரிலிருந்து இறங்கும் போது பட்டாசுகள் வெடிக்க, மேளதாளங்கள் முழங்க மாலை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அவரது தாயாரும், சகோதரரும், உறவினர்களும் ரம்யா பண்டியனுக்கு ஆரத்தி எடுத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் மேளதாள சத்தத்தை கேட்டவுடன் ரம்யா பாண்டியன் சாலையிலேயே தன்னை வரவேற்க வந்த தோழிகளுடன் குத்தாட்டம் ஆடினார் என்பதும் உறவினர்களைப் பார்த்து கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

105 நாட்களுக்கு பின்னர் ரம்யா பாண்டியன் வீட்டிற்கு வந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். தனது வருகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய அனைவருக்கும் தனது மில்லியன் நன்றி எனவும் ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் மேளதாளத்துடன் வரவேற்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது


 

More News

விழா மேடையில் இருந்த சரஸ்வதி படத்தால் இலக்கிய விருதையே உதறித் தள்ளிய கவிஞர்!

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற இருந்த மராட்டிய மூத்த கவிஞர் ஒருவர் விழா மேடையில் சரஸ்வதி படம் வைக்கப்பட்டு இருந்ததால் விருதையே வேண்டாம் என உதறி இருக்கிறார்.

மொபைல் போனால் குழந்தைக்கு கண் பார்வையைத் தவிர இத்தனை சிக்கலா? விளக்கம் அளிக்கும் வீடியோ!

பொதுவா கண் பார்வை பாதிக்கப்படும்  என்ற நோக்கத்தில்தான் நாம் மொபைல் போன்களை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம் எனச் சொல்கிறோம்.

மத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா? இளையராஜா விளக்கம்!

கடந்த சில மாதங்களாக இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ இடையே பிரச்சனை நீண்டு வந்த நிலையில் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அநீதி இழைத்ததாகவும்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

குழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீமிலும் கொரோனா வைரஸா? பதைக்க வைக்கும் தகவல்!

கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்புகளில் தங்கி இருக்கும் என்ற தகவலை கடந்த ஜனவரி மாதத்திலேயே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர்.