மேள தாளத்துடன் ஜெஃப்ரிக்கு கிடைத்த வரவேற்பு.. வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Sunday,December 29 2024]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும், இன்னும் மூன்றே வாரம் இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் டாஸ்க் அடுத்த வாரம் நடைபெறும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கியவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். முதலாவதாக, நேற்று ஜெஃப்ரி வெளியேறினார். முதல் நாளிலிருந்து சிறப்பாக விளையாடிய ஜெஃப்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக அவர் இருப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் 83வது நாளில் வெளியேறியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், இந்த வயதில் அவர் செய்த மிகப்பெரிய சாதனை என பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
இதே நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறிய ஜெஃப்ரியை மேளதாளத்துடன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில், இன்று வெளியேறும் போட்டியாளர் அன்ஷிதா என்று செய்தி வெளியாகியுள்ளது.