திருப்பூர் சுப்பிரமணியன் தலையீட்டால் முடிவுக்கு வந்த லிங்கா பிரச்சனை.
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என ஒருசில விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
"லிங்கா' பிரச்சனை குறித்து சுமூகமாக பேசி தீர்க்க நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் கலைப்புலி எஸ்.தாணு, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் மற்றும் லிங்கா படத்தின் விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லிங்கா படத்தால் நஷ்டமடைந்த விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.12 கோடி நஷ்ட ஈடு தருவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தொகையில் 50% தொகையான ரூ.6 கோடியை ரஜினியும், மீதி ரூ.6 கோடியை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் தருவதாக கூறப்பட்டது. ஆனால் ராக்லைன் வெங்கடேஷ் தரப்பில் இருந்து ரூ.4.5 கோடி மட்டுமே நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டதால், ஒருசில விநியோகிஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் நஷ்ட ஈடு தொகை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் மீதித்தொகையான ரூ.1.5 கோடியை விநியோகிஸ்தரும், ரஜினிக்கு நெருக்கமானவருமான திருப்பூர் சுப்பிரமணியன் தன்னுடைய சார்பில் தருவதாக கூறியிருப்பதாகவும், எனவே இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு திருப்பூர் சுப்பிரமணியன் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com