இருபிரிவினர்களிடையே மோதல்: பொன்பரப்பி கிராமத்தில் பயங்கர வன்முறை!
- IndiaGlitz, [Friday,April 19 2019]
சிதம்பரம் மக்களவை தொகுதியில் உள்ள அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி என்ற கிராமத்தில் நேற்று இரண்டு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பயங்கர வன்முறை நடந்துள்ளது. இதில் சுமார் 20 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது இருபிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த வன்முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதை அடுத்து அவரது சின்னமான பானை சின்னத்தை சிலா் சாலையில் போட்டு உடைத்ததாகவும், அதனை சிலா் தட்டிக்கேட்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது வன்முறையாக மாறியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்டு சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.
இந்த வன்முறை சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சுதந்திரத்தை நேசிக்கிறவனும், எதையும் எதிர்பார்க்காதவனும், எதற்கும் அஞ்சாதவனும், எதையும் கேட்காதவனும், அறிவுலகில் உண்மையைப் பேணி வளர்ப்பதன்றி வேறு எதற்கும் ஆசைப்படாதவனுமாகிய ஒருவனை (சமூகத்தை) இந்த சின்னஞ்சிறிய அற்பமான தாக்குதல்கள் ஊக்கமிழக்கச் செய்திடலாகாது' என்று கூறியுள்ளார்.
உலகின் மிக மோசமான பயங்கரவாதம்.
— Abimanya Vijayakumar (@AbimanyaV) April 19, 2019
சாதி வெறி. #பொன்பரப்பி #அரியலூர் pic.twitter.com/IEymRxHbwF