சூப்பர் சிங்கர் மேடையில் ஒலித்த சிறுவனின் ஆசை.. ஒரு கிராமத்தின் பல வருட ஏக்கம் நிறைவேறியது!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு சின்னஞ்சிறிய பையன், தன் தாய் தந்தைக்கும் தன் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளான். சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீசன் பார்ப்பவர்கள் அனைவரும் இந்த சிறுவனை அறிந்திருப்பர்.
விஷ்ணுவும் அவன் வாழும் கிராம மக்களும் குடிதண்ணீருக்கே வழியின்றி தவித்து வந்தனர். விஷ்ணு நன்றாக பாடக்கூடிய பையன். அவன் தன் முயற்சியால் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் முதல்கட்ட ஆடிஷன்களில் தேர்வாகி மேடையேறும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.
அவன் நிகழ்ச்சியின் முதல் நாளில் “அத்தை மக உண்ண நினைச்சு அழகு கவித எழுதி வெச்சேன்….. அத்தனையும் மறந்துப்புட்டேன் அடியே உன்ன பாத்ததுமே…” என்று மழலைக்குரலில் பாடி அனைவரையும் ரசிக்க வைத்தான். நடுவர்கள் மனோ சித்ரா மற்றும் இசையமைப்பாளர் D. இமான், மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா அவனுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
ஆனால் அவன் விருப்பம் தன் கிராமத்து மக்கள் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பது. அவன் இந்த நிகழ்ச்சியில் கொடுத்த ஒரு குரல், நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் செவிக்கு எட்டியது.
இந்த விஷயத்தை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கையில் கையில் எடுத்தார். உடனடியாக அந்த கிராம பஞ்சாயத்து மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஆழ்குழாய் தோண்டி, அந்த ஏழை எளிய மக்களுக்கு குடி தண்ணீர் வசதிக்கு வழிவகுத்துள்ளார். கிராமத்து மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடி தண்ணீர் எடுத்து வந்த நிலையை மாற்றியுள்ளார். இப்போது அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே தண்ணீர் வசதி வந்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் அளித்துள்ளது.
விஷ்ணு என்ற ஒரு சிறு பையன் தன் கிராமத்தின் துயர் துடைத்துள்ளான் அவன் திறமையும் அவனது சமுதாயம் சார்ந்த இந்த நோக்கமும் இந்த வயதில் ஒரு பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
“ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல தண்ணியும் முக்கியம்” என்று அந்த ஊர் மக்கள் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் வரும் வாரம் டிசம்பர் 14, 15 சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பார்த்து மகிழலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout