விஜய்யின் 'புலியுடன் மோதுகிறதா அஜீத்தின் 'வேதாளம்?

  • IndiaGlitz, [Sunday,September 27 2015]

கடந்த சில நாட்களாக இணையதளங்கள், சமூகவலைத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி-வானொலி அனைத்திலும் புலி மற்றும் வேதாளம் படங்களின் செய்திகளே பெரும்பாலும் ஆக்கிரமித்து வருகின்றது. இந்த படங்களின் டிரெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி வருவதை அடுத்து அஜீத்-விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் 'புலி' படத்தின் இரண்டாவது டீசர் மற்றும் ஜிங்குலியா' புரமோ பாடல் ஆகியவை சூறாவளியை கிளப்பிவிட்டது. அதேபோல் அஜீத் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி 'புலி' படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே தேதியில் அஜீத்தின் 'வேதாளம்' படத்தின் டீஸர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் ஒருமுறை சமூக வலைத்தளங்கள் இரு பெரும் சூறாவளியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸின் 'கோ 2' டிராக் லிஸ்ட்

தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா நடிக்கும் 'கோ 2' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது....

அக்டோபர் 9-ல் அனுஷ்காவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவரது அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.....

விஜய்யின் 'புலி'. ஒரு முன்னோட்டம்

இளையதளபதி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜய்யின் 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.....

ஒரே டைட்டிலில் உருவாகும் இரு படங்களிலும் ஒரே நடிகை

திரையுலகில் ஒரே டைட்டிலில் இரண்டு படங்கள் தயாராவது என்பது எப்போதாவது நடைபெறுவது உண்டு...

வேதாளம்' படத்தின் ஆச்சரியபட வைக்கும் வியாபாரம்.

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் பெரும்பகுதி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது...