கூவி..கூவி.. விற்கப்படும் கொரோனா. சிரிக்காம பாருங்க இந்த வீடியோவை..!
- IndiaGlitz, [Tuesday,March 10 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பரவிவருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மாட்டும் 1,14,569 பேர்.
இந்தியாவிலும் இந்த வைரஸானது பரவியுள்ளது. காஷ்மீர், டெல்லி, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு இந்த மாநிலங்களில் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகமூடி அணியுமாறும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும், முகத்தை கைகளால் தொடக் கூடாது எனவும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் முகத்திற்கு அணியும் மாஸ்க்கும் கைகளை சுத்தப்படுத்தும் திரவத்திற்கும் கடும் தட்டுப்பாடு நிகழ்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு மார்க்கெட் பகுதியில் வியாபாரி ஒருவர் முகத்திற்கு அணியும் மாஸ்குகளை கொரோனா கொரோனா என கூவி கூவி விற்று வருகிறார். அந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ள நெட்டிசன் இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என கூறியுள்ளார். நிஜமாகவே இப்படியெல்லாம் இந்தியாவில் மட்டுமே நிகழும்..!
It happens only in India! ????♂️ #CoronaVirus pic.twitter.com/V3jxaJqphQ
— T.S.Suresh (@editorsuresh) March 10, 2020