கால்பந்து மைதானத்தில் விழுந்த விமானம்: 67 பயணிகள் கதி என்ன?

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று நேபாளத்தில் தரையிறங்கும்போது திடீரென ரன்வேயை விட்டு விலகி அருகில் இருந்த கால்பந்து மைதானத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் நேபாளத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்  நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்ற பொழுது திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் விமானத்தின் பெரும்பகுதி சேதம் அடைந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 67 பயணிகள் பயணம் செய்த நிலையில் 17 பேர் மீட்புப்படையினர்களால் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதி பயணிகளின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. 

More News

ஆர்.கே.சுரேஷின் அடுத்த பட டைட்டில், இயக்குனர் அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் கமல்ஹாசனின் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார்.

மீண்டும் பிரபல பாடகிக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம்.

முதல்முறையாக ரஜினியை விமர்சனம் செய்த கமல்

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பே தனக்கு நெருக்கமான பலரிடம் தெரிவித்து அவர்களிடம் வாழ்த்துக்களும், ஆசியையும் பெற்றார். அவ்வாறு சந்தித்த நபர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது

உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது: காட்டுத்தீ குறித்து கவிஞர் வைரமுத்து

குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 40 பேர் வரை காட்டுத்தீயில் சிக்கி கொண்ட நிலையில் அவர்களை மீட்க இந்திய விமானப்படை ஈடுபட்டு வருகின்றனர்.

குரங்கணியை டிரெக்கிங் ஆர்வலர்கள் தேர்வு செய்வது ஏன்?

தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் தான் இந்த குரங்கணி ஹில்ஸ்.