கால்பந்து மைதானத்தில் விழுந்த விமானம்: 67 பயணிகள் கதி என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கதேசத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று நேபாளத்தில் தரையிறங்கும்போது திடீரென ரன்வேயை விட்டு விலகி அருகில் இருந்த கால்பந்து மைதானத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் நேபாளத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்ற பொழுது திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் விமானத்தின் பெரும்பகுதி சேதம் அடைந்தது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 67 பயணிகள் பயணம் செய்த நிலையில் 17 பேர் மீட்புப்படையினர்களால் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதி பயணிகளின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout