தமன்னாவை மிரட்டிய மர்ம நபர்.. போன் உரையாடலில் என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை தமன்னா தன்னை ஒருவர் போனில் மிரட்டியதாகவும் ஆனால் தான் சுதாரித்து கொண்டதால் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டதாகவும் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை தமன்னா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னிடம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து உடனடியாக கரண்ட் பில் கட்ட வேண்டும், உங்கள் மொபைலுக்கு அனுப்பிய லிங்கை கிளிக் செய்து உடனே கரண்ட் பில் கட்டவில்லை என்றால் கரண்டை கட் பண்ணி விடுவோம், அது மட்டும் இன்றி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
நடிகை தமன்னா அந்த நபரிடம் தான் ஏற்கனவே கரண்ட் பில் கட்டி விட்டதாக கூறிய நிலையில், தமன்னா சொன்னதை காதில் அந்த நபர் வாங்கவில்லை என்றும் உடனடியாக லிங்கை கிளிக் செய்து கட்டாவிட்டால் கரண்டை கட் பண்ணி விடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு பொறுமை இழந்த தமன்னா ’நாங்கள் ஏற்கனவே கரண்ட் பில் கட்டி விட்டோம் , முடிந்தால் கரண்டை கட் பண்ணி கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அதன் பிறகுதான் அது ஒரு போலியான நபர் என்றும் அவர் அனுப்பிய லிங்க் போலியானது என்றும் அதை கிளிக் செய்து தான் பணம் கட்டி இருந்தால் தன்னுடைய பணம் போனது மட்டுமின்றி தன்னுடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் இது மாதிரி கரண்ட் பில் கட்ட வேண்டும் என்று போன் செய்து மிரட்டினால் பயப்பட வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருந்து ஒரு முறைக்கு இருமுறை லிங்குகள் உண்மையானது தானா என்பதை உறுதி செய்த பின் தான் கிளிக் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com