கமல் பாணியில் களமிறங்கும் விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்கும்போதும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும்போது கமல்ஹாசனின் ஆதரவை பெற்ற நடிகர் விஷால் அவரது பாணியில் அரசியல் அமைப்பு ஒன்றையும் சமீபத்தில் தொடங்கிவிட்டார்.
தற்போது அடுத்தகட்டமாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது போலவே விஷாலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்த புரமோ ஒன்றில் 'விதைச்சவன் தூங்கலாம், விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா? என்று விஷால் பேசும் வசனம் உள்ளது. 'தேவர் மகன்' படத்தில் இடம்பெறும் வசனமான 'விதை நான் போட்டது' பாணியில் இருக்கும் இந்த வசனத்தை விஷால் எந்த நிகழ்ச்சிக்காக பேசினார் என்ற விபரம் இன்னும் ஒருசில நாட்களில் தெரியவரும். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ள நிலையில் அதேபோன்று மேலும் ஒரு நிகழ்ச்சியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments