இந்த வாரம் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் டுவிஸ்ட் .. ஷிவாங்கியை கடுமையாக திட்டிய செஃப் தாமு..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தற்போது நான்காவது சீசன் வழக்கம்போல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு புதிய டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று சீசன்களில் உள்ள மூன்று குக்குகள் இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல் சீசனில் இருந்து ரேகா, இரண்டாவது சீசன் இருந்து ஷகிலா, மூன்றாவது சீசனில் இருந்து ரோஷினி ஆகியோர் வந்துள்ளனர். இந்த மூன்று பேரில் யாராவது ஒருவர் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்த சீசனில் உள்ள 6 குக்குகளூம் அடுத்த வாரம் எலிமினேஷன் ரவுண்டுக்கு வருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் பரத், சரத் ஆகிய இரண்டு கோமாளிகள் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியின் போது ஷிவாங்கிக்கு பாகற்காய் சமைக்க வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. ஆனால் தன்னால் பாகற்காய் சமைக்க முடியாது என்று ஷிவாங்கி கூற, இதனால் கடுப்பான செஃப் தாமு, ‘நீங்கள் ஒரு போட்டிக்கு வந்துள்ளீர்கள், கொடுத்த பொருளை வைத்து சமைக்க வேண்டும், முடியாது என்று கூறிய அடம்பிடிக்க கூடாது’ என்று சற்று கடுமையாக திட்டினார். இதனை அடுத்து ஷிவாங்கியின் முகம் சோகமாகியது.

ஏற்கனவே விஜய் டிவி ஷிவாங்கிற்கு அதிக சலுகைகள் கொடுப்பதாகவும், கடந்த வாரம் ஷிவாங்கி தான் எலிமினேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் விஜய் டிவி நிர்வாகம் விஜே விஷாலை எலிமினேட் செய்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் ஷிவாங்கியை செஃப் தாமு கடுமையாக திட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.