சர்கார் கதை விவகாரத்தில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Tuesday,October 30 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை, தான் கடந்த 2007ஆம் ஆண்டு எழுதிய 'செங்கோல்' என்ற கதை என்று கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன்பிக்சர்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது என்ன மாதிரியான சமரசம் ஏற்பட்டது என்பது குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது. 'சர்கார்' படக்குழுவினர் வருண் ராஜேந்திரனுடன் திடீரென சமரசம் செய்துள்ளது திடீர் திருப்பமாக கருதப்படுகிறது.

More News

ஒரே பாடலில் ஜேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள்

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் அதாவது ஜேசுதாஸ், அவரது மகன் விஜய்ஜேசுதாஸ், ஜேசுதாசின் பேத்தியும் விஜய்ஜேசுதாசின் மகளுமான அமேயா ஆகிய மூவரும் ஒரு பாடலை பாடியுள்ளனர்.

அஜித்தின் 59வது படம் குறித்த அசத்தலான தகவல்

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 59 திரைப்படம் நேற்று கையெழுத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது.

'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாஸ்' பஞ்ச் டயலாக் இதுதான்

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் படத்தில் மாஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்

நடிகர் சிவகுமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது ஒரு இளைஞர் ஆர்வக்கோளாறில் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.

மூன்று மணி நேரத்தை நெருங்கிய 'சர்கார்' ரன்னிங் டைம்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் குறித்தும் அதன் கதை குறித்தும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளதை படக்குழுவினர் உறுதி செய்து வருகின்றனர்.