கார்த்திகை தீபம் தொடரில் திடீர் திருப்பம்.. நாயகிக்கு இரட்டை வேடமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா நடித்து வரும் நிலையில் இந்த தொடரில் ஆர்த்திகா இன்னொரு கேரக்டரில் நடித்து வருவதாகவும் அதனை அடுத்து அவர் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் முன்னோட்டம் வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா ஆகிய இருவரும் ’பிளாக் அண்ட் ஒயிட்’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் ’கார்த்திகை தீபம்’.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு 9 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடருக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் கார்த்திக்கின் மனைவி தீபா என்ற கேரக்டரில் ஆர்த்திகா நடித்து வந்த நிலையில் தீபா கேரக்டர் திடீரென இறந்து விடும் வகையில் கதை அமைந்துள்ளதால் தற்போது அவரை நினைத்து வாடும் கார்த்திக் சோகமாக உள்ள காட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் தான் திடீரென கீதா என்ற மாடன் உடையில் உள்ள பெண்ணை கார்த்திக் சந்திக்கிறார் என்றும் கீதா கேரக்டரிலும் ஆர்த்திகா தான் நடிக்கிறார் என்றும் முன்னோட்ட வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கார்த்திக், தீபா போலவே இருக்கும் கீதாவை திருமணம் செய்து கொள்வாரா? இருவரும் இணைவார்களா? என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டிஆர்பி யில் மாற்றம் பெரும் வகையில் திடீரென கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரட்டை வேடம் என்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெங்காளி மொழியில் ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடர் ஒளிபரப்பான நிலையில் அந்த தொடரின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் ’கார்த்திகை தீபம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments