இன்னும் சில வாரங்களில் திருப்புமுனை.. பிரதீப் யாரென்று போட்டியாளர்களுக்கு தெரியும் நாள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சில வாரங்களில் ஃபேமிலி ரவுண்டு வர இருக்கும் நிலையில் அப்போது வெளியே இருந்து வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிரதீப் குறித்து பேசுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பை அபாண்டமாக பழி சுமத்திய மாயா பூர்ணிமா குரூப், வெளியேற்றிவிட்டது. மாயா, பூர்ணிமாவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் இன்னும் பிரதீப் வெளியே டிரெண்டிங்கில் இருப்பது தெரியாது. இதனால் தாங்கள் செய்தது சரி என்று இன்று வரை அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் பேமிலி ரவுண்டு வரும்போது உள்ளே வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் வெளியே பிரதீப்புக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது, பிரதீப் எந்த அளவுக்கு ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்பதை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போதுதான் அனைவரும் தாங்கள் செய்தது எந்த அளவுக்கு தவறு என்பதை நினைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பேமிலி ரவுண்டுக்கு பின்னர் போட்டியாளர்களின் விளையாட்டில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக ஃபேமிலி ரவுண்டில் ஷிவானி அம்மா, லாஸ்லியா அப்பா வந்த பிறகு அவர்களுடைய ஆட்டத்தில் மாற்றம் தெரிந்தது போல் இந்த சீசனிலும் பிரதீப் குறித்த உண்மையை அறிந்த பின்னர் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com