பிச்சைக்காரன் படத்தை போல் நடந்த நெஞ்சை நெகிழ செய்யும் உண்மைச்சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடித்த வெற்றி படமான 'பிச்சைக்காரன்' படத்தில் தனது அம்மா குணமாக வேண்டும் என்பதற்காக கோடீஸ்வரரான விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக ஒரு வேண்டுதலுக்காக நடிப்பார். இதேபோல் ஒரு உண்மைச்சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த நடராஜன் என்ற கோடீஸ்வரருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டும் திருமணமான நிலையில் மருமகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நடராஜன் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியேறினார். தமிழகம் முழுவதும் கோவில் கோவிலாக சுற்றிய நடராஜன், இறுதியில் சென்னை அருகேயுள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் தஞ்சம் அடைந்தார்.
அங்கு அவர் கோவிலில் தரும் அன்னதானம், பக்தர்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு சுமார் மூன்று மாத காலம் தங்கியிருந்தார். இந்த நிலையில் நடராஜனின் மனைவி மற்றும் மகன்கள் நடராஜனை தமிழகம் முழுவதும் தேடி இறுதியில் திருப்போரூர் வந்தனர். அங்கு தாடி மீசையுடன் அடையாளம் தெரியாத வகையில் இருந்த நடராஜனை கண்ட அவரது மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடராஜனின் மனைவியும் தனது கணவர் கிடைத்துவிட்டதை அறிந்த ஆனந்தக்கண்ணீர் விட்டார். பின்னர் குடும்பத்தினர் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க மீண்டும் வீட்டுக்கு வர சம்மதித்தார். கோடீஸ்வரர் ஒருவர் மூன்று மாத காலம் தங்கள் பகுதியில் பிச்சைக்காரர் போல் வாழ்ந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments