பிரபல கவர்ச்சி நடிகையின் பயோபிக் படத்திற்கு மிரட்டல்!

  • IndiaGlitz, [Tuesday,March 09 2021]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் தெலுங்கு திரை உலகை பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி என்பதும் இவர் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு திரையுலகையே அதிர வைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’ஸ்ரீரெட்டி டைரி’ என்ற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜங்கம் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை ரவி தேவன் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்கள் வெளிச்சம் காட்டப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல் வந்துள்ளதாக தயாரிப்பாளர் ரவிதேவன் கூறியுள்ளார். ’ரெட்டி டைரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ள நிலையில் போனில் மிரட்டல் வந்து கொண்டிருப்பதால் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டைரி என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகி வருவதாகவும் அந்த படத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் ரவிதேவன் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு மிரட்டல் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.